போய் வா கண்ணே

கண்ணே சுர்ஜித்...
இப்படியொரு பொழுது
விடிந்திருக்க கூடாது
விடியவைத்தான் இறைவன்
கருணை இல்லாமல்

ஏனோ எங்களின்
பிரார்த்தனைகள் பலனின்றி
போனது

உயிருக்காக நீ போராடிய அந்த
ஒவ்வொரு நொடியும்
எங்கள் இதயம்
வெடித்து சிதறியதுப்போல்
இருந்தது

இந்த
உயிர் போராட்டத்தில்
நீ இறைவனோடு இணைந்துவிட்டாய்

இதைப்போன்ற
அசம்பாவிதம்
இனி நடக்ககூடாது
என எச்சரிக்கை
செய்து செல்கிறாய்
புரிகிறது எங்களுக்கு

உன் நினைவு வந்தால்
எங்களுக்கு
கண்ணீர் வருகிறது
எங்கள் கண்ணீருக்குள்
உன் நினைவு இருக்கிறது

போய் வா கண்ணே
உனை காப்பாற்ற
முடியாத நாங்கள்
எங்களின்
கண்ணீர்த் துளிகளை
காணிக்கையாக்குகிறோம்

நீ தான்
இந்த ஆழ்துளை கிணற்று
உயிரிழப்புகளில்
கடைசியாக வேண்டும்
என இந்த இயற்கையை தாயை
வேண்டுகிறோம்

ஆயிரமாயிரம் அஞ்சலி
உன் ஆன்மா இளைப்பாறட்டும்...

இனியொரு விதிசெய்வோம்
இப்படி நடக்காமலிருக்க...

..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (29-Oct-19, 7:08 am)
Tanglish : ppoi vaa kanne
பார்வை : 909

மேலே