சுஜித் மகனே எங்கு நீ சென்றாய்

சுஜித் மகனே
உன் பிஞ்சு முகத்தை
இனி என்று தான் நாம் காண்போம்
எங்கு நீ சென்றாய்
அனலிட்ட புழுவாக
எம் மனசு துடித்தே வேகுதடா

குஞ்சுக் கால்கள்
ஐந்து நாட்கள்
நீட்டவும் முடியாமல்
மடக்கவும் முடியாமல் சுஜித் மகனே
உன் பிஞ்சு உடல்
பாளான அந்த
ஆள் கிணற்றில்
எத்தனை பாடு பட்டிருக்கும்
நினைத்தால் எம்
நெஞ்சம் துடிக்குதடா

பசி தாங்கும் வயதா உனக்கு
சோற்றுப் பருக்கையில்
வாய் வைக்கவே முடியாமல்
ஆள் சேற்றுக் குழியிலே
உன் உயிர் சிறிது சிறிதாய்
அடங்கிப் போனதே

உன் எழில் உடலை
உயிரோடு காக்காத
தொழில் நுட்பம் இனி
இருந்தென்ன செத்தென்ன
ஆளும் அரசாங்கமே
நாம் வாழும் வரை
இனியொரு நாளும்
இந்த பாளும்
ஆள் துளைக் கிணற்றின்
அவலம் வேண்டாம்
அத்தனையையும் ஒழுங்காய்
சீமெந்து சாந்திட்டு
அடைத்து விட
உத்தியோக பூர்வமாய்
இன்றே நீ ஆட்களை நியமி

அஷ்றப் அலி

எழுதியவர் : (29-Oct-19, 4:04 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 62

மேலே