உழவன் பாட்டு

நாசி வழியே உள்ள நுழையுது
நல்ல மணம் அது...
சோறு கொடுக்கும் சோள நாத்து வாசம்...!

காத்து அடிக்குது, தலை அசைக்குது
பொட்டு எல்லாம் உதிர்க்கும்...
பால் வச்சுத் தானே பிடிக்கும்...
கதிர் முத்துப்போல சிரிக்கும்...!

ஆடு, மாடு மேயத் தானே
அறுவடைக்குப் பொறுக்கும்...
அடுக்கி வச்ச சாக்கு மூட்டையெல்லாம்...
செல்வங்களைக் கொடுக்கும்...!

முற்றிய தட்டை மடிந்து
வீழும் முன்னே...
அறுத்தெடுத்து கட்டு கட்டி வைப்போம்...!

படப்பாக்கி பாதுகாக்க நினைப்போம்...
கோடையில பஞ்சம் வந்தா.. ?
அதையெல்லாம் கால்நடைக்கு அளிப்போம்...!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (29-Oct-19, 5:19 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : uzhavan paattu
பார்வை : 2711

மேலே