சென்று வா சுர்ஜித்

இருண்ட பூமி இழுக்குதம்மா...
வறண்ட நாவும் அடைக்குதம்மா...
கழுத்து முடிச்சு சுருங்குதம்மா...
கருவறை கண்முன் வருதம்மா...
நீ அணு அணுவாய் ஊட்டிய சோறும்
அழகழகாய் பார்த்த கண்ணும் ஒளி மழுங்குதம்மா....

தந்தையிடம் கூறு நாளை விளையாட நான்னிருப்பேன் என்று
பாட்டியிடம் கூறு
அடம்பிடிக்க நான் வருவேனென்று
அண்ணனிடம் கூறு
பொறுமையாய் காதிருவென்று...
உன்னிடம் நீயே கூறு
நான் மரணம் வென்றவனென்று...

விழுந்தது என் தவறே
எந்த நாட்டில் பிறந்தேன் என்பதை உணராமல் விழுந்துவிட்டேன்
உணவுக்கே கைவிரிக்கும் தேசம் என் உயிருக்கா கை கோர்க்கும்

இருள் விலகி ஒளி அழைக்குதம்மா...
பொறுத்திரு விளையாட மீண்டும் வருவேன்
உன் மகனாக மடியில் தவழ்வேன்...
மீண்டும் பிறந்து....

விடைகொடு தாயே...😔😔

எழுதியவர் : ஹாருன் பாஷா (30-Oct-19, 8:57 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 43

மேலே