ஆகா ஆனந்தம்
சுதந்திரம் அடைந்தோம் சுதந்திரம் அடைந்தோம்
சுயமாய் வாழவே சுதந்திரம் அடைந்தோம்
சுயத்தைப் பேணவே சட்டங்கள் செய்தோம்
சுற்றம் சூழ்ந்து வளங்காணவே ஒற்றுமையானோம்
உழைப்பால் கிடைத்ததை உரிமைக் கொண்டாடி
உரியதை நமது சந்ததி பெற்று உன்னதமடைய
சுதந்திரம் அடைந்தோம் சுதந்திரம் அடைந்தோம்
சுயமாய் வாழவே சுதந்திரம் அடைந்தோம்
எண்ணியதை எல்லாம் எளிதில் பெற்று
எல்லா நிலை மக்களும் ஏற்றம் கண்டிடவே
சுதந்திரம் அடைந்தோம் சுதந்திரம் அடைந்தோம்
சுயமாய் வாழவே சுதந்திரம் அடைந்தோம்
பள்ளியில் கற்று கல்வியில் உய்ய
பலகலை தன்னில் புலமையில் மிளிர
சுதந்திரம் அடைந்தோம் சுதந்திரம் அடைந்தோம்
சுயமாய் வாழவே சுதந்திரம் அடைந்தோம்
ஆளவேண்டியவனை அனைவராலும் ஆக்க
அதற்கான தேர்தலை அழகுற நடத்த
சுதந்திரம் அடைந்தோம் சுதந்திரம் அடைந்தோம்
சுயமாய் வாழவே சுதந்திரம் அடைந்தோம்
எந்நாளும் போரால் எண்ணற்ற துன்பம்
உண்டாக்கும் அரசை ஒருவாறு களைந்திட
சுதந்திரம் அடைந்தோம் சுதந்திரம் அடைந்தோம்
சுயமாய் வாழவே சுதந்திரம் அடைந்தோம்
எந்தவொரு தேசத்திற்கும் எளிதில் செல்ல
எந்நிலை மானிடரோடும் இரண்டற கலக்கவே
சுதந்திரம் அடைந்தோம் சுதந்திரம் அடைந்தோம்
சுயமாய் வாழவே சுதந்திரம் அடைந்தோம்
கண்ணியமான சுதந்திரந்தன்னை கண்ணாய் எண்ணி
கனந்தோறும் நாமும் போற்றி காத்திடும் வரையில்
கடுஞ்சண்டையும் கட்டுப்பாடும் சட்டத்தால் கட்டுப்படும்
காணா நிலையில் மாறிவிடின் கடுந்துன்பமே பெருகும்
---- நன்னாடன்.