நீ போதும்
நிறைய காதல்களும் நிறைய காமங்களும்
எளிதில் எட்டும் நிலைதனில்
எனக்கு உன்னை மட்டும்தான் பிடித்திருக்கிறது என்பதற்கு
நான் அத்தனை யோக்கியன் என்றர்த்தமல்ல,
எனக்கும்
என் மீத வாழ்விற்கும்
நீ போதும் என்றர்த்தம்!
Insta Id: @tashantatanisha