காதல் சொல்ல வந்தேன்-4

காதல் சொல்ல வந்தேன்-4
நாளைய சந்திப்பு எங்கே எத்தனை
மணிக்கு என்ற முன்னேற்பாட்டோடு
பிரிய மனமின்றி பிரிந்து அன்று
கிடைத்த அனுபவத்தை விட்டு
மறுநாள் சந்திப்பைப் பற்றி இன்றே கற்பனை செய்து
விடியலுக்காக தூங்காமல் தவித்து
வந்த தூக்கத்தையும் கலைத்த
விடியும் நேரம்பார்த்து விடிந்தப்பின்
வேலையென்று ஏதும் இல்லாததால்
உன்னை சந்திப்பதையே வேலையாக்கி கொண்டு
சந்திக்க தீர்மானித்த நேரத்திற்காக காத்திருந்து
பொறுமையிழந்து சொன்ன நேரத்திற்கு முன்னதாக போய் நின்று
காத்திருத்தலை ஒரு அனுபவமாகபெற
கற்றுத் தந்த நம் காதலின் அடுத்த
சந்திப்பிற்க்கு
முன் நடக்கும் நிகழ்வில் நீ மட்டுமே
நிழலாடுவாய் என் நினைவில் ஏன் என்றால்
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்