இயற்கை

அசுர வேகத்தில் வரும்
மாக்கடலின் சுனாமி அலைகளுக்கு
வலியோர் யார் தாழ்ந்தோர் யார்
என்ற பாரபட்சம் தெரியாது -அதன்
பாதையில் வரும் எல்லாமே நாசம்
அதோ மனிதரோ, விலங்கோ, இல்லை
மாட மாளிகையோ , கூட கோபுரமோ
இல்லை பூஞ்சோலையோ , காடோ

சூறாவளி வீசினாலும் நாசம் இப்படியே
அடங்கா வெள்ளமாய்ப் பெருகிவரும் நதியும்
இப்படித்தான் அழிவுகள் விளைவிக்கும்

பின் தென்றலாய் வீசும் பூங்காற்று ......
இதுவும் காற்று தானே
அமைதியான நதி அது என்ன வேறா
பார்க்க பார்க்க பரவசமூட்டும் கடல் அலை
இது வேறா ...... அது எப்போது சுனாமி ஆனது

குறைவற்ற அழகு தாங்கும் இயற்கை
கோபத்தில் தன் வசம் இழந்து சீறும்போது
தென்றல் சூறாவளியாகும், நதியில் வெள்ளம்
பூமித்தாய் கடலடியில் குமுற மேல் அலைகளும்
சுனாமியாய் மாறி நாசம் .......

அணைக்கும் இயற்கைக்கு அழிக்கவும் தெரியும்
மனிதன்தான் இதை புரிந்துகொள்வதில்லை ..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Nov-19, 2:21 pm)
Tanglish : iyarkai
பார்வை : 714

மேலே