ஓலமிட்டு அழும் ஆறும் குளமும்

ஓலமிட்டு அழும் ஆறும், குளமும்

ஊரை எல்லாம் சுற்றி
அலுத்து சலித்து உடல்
கறுத்து வந்த சிற்றாறு
ஒன்று
கடலாய் தேங்கி நின்ற
குளத்துக்கு வந்து சேர்ந்த
பொழுது
அதை வாவெனறு
முன் சென்று அணைத்து
அழைத்து சென்றாலும்
உன் அழுக்கையெல்லாம்
இங்கு கொண்டு சேர்த்து
எங்கள் பிள்ளைகளை
மூச்சு முட்ட செய்கிறாய்
வருத்தமாய் சொன்னது !

நான் என்ன செய்வேன்?
இந்த மனித பதர்களுக்கு
என் அருமை புரியாமல்
சாக்கடை கழிவுகளாய்
இரசாயன கழிவுகளாய்
கலக்கவிட்டு இரசிக்கின்ற
இவர்களை முகம் கொண்டு
பார்க்க மறுத்து வேகமாய்
வந்தாலும்…
பார் என் உடல்
எப்படி இருக்கிறது?

பெருமூச்சு விட்ட தேங்கிய
குளம்

ஓட்டமாய் ஓடும் நீயே
மனிதர்களிடம்
தப்ப முடியவில்லை
நாங்கள் எம்மாத்திரம்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (31-Oct-19, 3:26 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 174

மேலே