கார்த்திகை

கார்த்திகை மாதத்து
முதல் நாள் இன்று
காரணத்தோடு
ஏதேதோ நினைவுகள்
வருவதும் போவதுமாய் .....

பணிக்குப் போய்
திரும்பும் வளியில்
பேரூந்தில் சாளரத்தினூடே
ஓர் கண்ணோட்டம்
வெளி நோக்கி....

பனிக்காலம் வருமுன்
தம் பச்சையத்தை
பாதுகாப்பாய்
உள்ளிழுத்துவிட்ட
பெருமிதத்தில்;
பட்ட மரங்கள்
கம்பீரத் தோற்றம்!

பகல் நேரம்
முகில்க்கூட்டம்
பாதி வழி வந்திறங்கி
பனிதூவிச் செல்கிறது;
பனிக்கால எச்சரிக்கை
விடுப்பதாய்...!

இனி வரப்போகும்
மூன்று மாதகாலத்தை
முணு முணுத்தபடியே
பெருங்கூட்டம்;
ஏறுவதும் இறங்குவதுமாய்...

பழகிப் போன
படு இருட்டு
இப்போதெல்லாம் ஏனோ
வேண்டுமென்றே
நினைக்கிறது...

இருளில் ஒளிரும்
மின் விளக்கில்
பட்டுத் தெறிக்கும்
பனி படர்ந்த
பட்ட மரங்களின்
வெள்ளை முக்காடும்;
வருடத்தில் ஒரு
முறை வந்து போகட்டும்

கார்த்திகை தீபம்
காலமெல்லாம்
ஏற்றிட
நம் காவிய நாயகர்
பாதங்களில்
கார்த்திகை பூவும்
உதிர்த்திட;
மாண்டவர் பூமி
மீட்டிட
வருக வருக
கார்த்திகை மாதமே

எழுதியவர் : யோகராணி கணேசன் (2-Nov-19, 5:56 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : kaarthikai
பார்வை : 904

மேலே