அவள்

உன்னைப் பார்த்தேன்
பார்த்த நான்
உன் அங்கம் ஒவ்வொன்றின் அழகையும்

மனதில் பதித்து ரசித்தேன்
என்னுள் ஏதேதோ எண்ணங்கள் சலனங்கள்
கட்டுக்கடங்காமல் என்னை
ஒரு பித்தன் போல் ஆக்கிட ,
மீண்டும் ஒருமுறை உன்னைப் பார்க்க
என் எண்ணம் தூண்ட
உன்னை ஒரு முறை நேராக
கண்ணோடு கண் சேர பார்த்தேன்
அந்த பார்வையில் நான் கண்டது
என்னுள் பதிந்த எண்ணங்கள் , சலனங்கள்
அத்தனையையும் உறையச்செய்தது
ஆம், அந்த பார்வையில் நான்
அவள் கண்களில் கண்டது .....
சொல்லத்தெரியவில்லை எனக்கு
கவிதையாய்ப் புனைய சொற்களும்
கிடைக்கவில்லை ...... அது ஒரு காதல் தீபம்
அதுவே அவள் கண்களில் நான் பார்த்தது
அவள் பார்வையில் சிக்கினேன் நான்
என் பார்வையில் அவள் அல்ல
புரிந்தது எனக்கு
இப்போது என் எண்ணங்களில்
அவள் என் காதலி, காதல் தீபம்
என்னை வாழவைப்பாள் இவள்
என்று என்னை இப்போது
என்னை எண்ணவைக்கும் கண்ணொளி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Nov-19, 8:25 pm)
Tanglish : aval
பார்வை : 332

மேலே