உன் பிரிவை நினைத்து நானும் 555

ப்ரியமானவளே...


நாட்கள் கடந்து இந்த

எதார்த்த சந்திப்பில்...


இதழ்கள் பேசவில்லை

கண்கள் பேசியது...


இரவோ பகலோ என்னில் உன்

நினைவுகள் மட்டும் குறையவில்லை...


இரும்பான என் மனதை

மலராக மாற்றியவள் நீதான்...


இன்று மலரை பறித்து காயத்தை

மட்டும் கொடுத்துவிட்டாய்...


மலரும் வாடுகிறது

என் மனமும் வாடுகிறது...


உன்

பிரிவை நினைத்து.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Nov-19, 4:13 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 751

மேலே