ஆசையும் ஏமாற்றமும்

நாம் தவறு செய்கின்றோம் என்று நமக்கு தெரிகின்றது ஆனாலும் என்னை அதை தவிர்க்க முடியவில்லை...

இது நமக்கு கிடைக்காது என்று தெரிந்தும் நாம் ஒன்றின் மீது ஆசை வைக்கின்றோம்.. ஆனாலும் அது நமக்கு புரியவில்லை...

மீண்டும் மீண்டும் நான் செய்த தவறையே செய்து கொண்டு இருக்கின்றேன்..

நீண்ட இடைவெளிக்கு பின்பு நம்மை தேடி வந்தவர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்கின்றோம்..

ஆனால் அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் நாம் முழு நம்பிக்கை வைப்பது தவறு.

தற்காலிகமான சந்தோசத்தை நம்பி ஏமார்ந்து, மீண்டும் மிக பெரிய சோக கடலிற்குள் சிக்கி கொள்ள வேண்டாம்..

எழுதியவர் : இரா பூவரசன் (6-Nov-19, 12:53 pm)
சேர்த்தது : இராபூவரசன்
பார்வை : 98

மேலே