அன்புள்ள அப்பா
# படிக்க மட்டும் அல்ல #
மகாராசன் பொறந்தன்னு
ஊர் முழுக்க
சோறு போட்டு...
என்ன பெத்த ராசான்னு
எட்டு பட்டிக்கும்
சொல்லி வச்சி...
உள்ளம் கையில் ஏந்தி
ஊரெல்லாம் சுத்தி வந்து...
பள்ளிக்கூடம் போகனுன்னா
பாதம் நோகிப் போகுமுன்னு...
பல்லாக்கில் தூக்கி போயி...
பட்டணத்தில் படிக்க வச்சி...
மூக்கு மேல
கைய்ய வைக்க
மூனு முடிச்சு
கட்ட வைச்சி..
சொகரிகம் போததுன்னு
சந்தோசமா அனுப்பி வைச்சு.
காலம் பல
கடந்து போக..
பவுச பய
தூங்கும்போது ..
என்னங்க யாரோ
கூப்பிடுராங்க
வாசல்ல பாருங்க...
எங்கேயோ கேட்ட குரல்
என்று எட்டி வந்து
நீன்னு பாத்தா...
மகாராசன் நல்லருப்பிங்க
ஒரு வாய் சோறு
போடுங்களேன்...
வாசலில் தன்
வயதான அப்பா...
அதிர்ச்சியின் உச்சத்தில்
இருவரின் கண்களில்
இருந்து கண்ணீர்
வார்த்தைகளாய்..
அப்பாவின் அடையாளத்துடன்
டேவிட் சாமுவேல் ராஜா...