“குழந்தைகள் தின நல்வாழ்த்து”

“குழந்தைகள் தின நல்வாழ்த்து”
பள்ளி என்னும் சோலையிலே
புள்ளி மானாய்த் திகழ்ந்து என்றும்
கொள்ளை அழகுடன் வீற்றிருக்கும்
பிள்ளைச் செல்வங்கள் நீங்களே

கல்விச் செல்வம் கற்றுயர்ந்து
கலைவானில் எழில் நிலவாய்
காலம் முழுதும் பவனிவந்தே
கானக்குயிலாய் குரல் எழுப்பி

சோதனை பலவும் தகர்த்தெறிந்து
சாதனை படைத்தே என்றென்றும்
சீர் புகழ் பெருமைப் பெற்றுயர
சிந்தைக் குளிர வாழத்துகின்றேன்.

அன்புடன் வாழ்த்தும்
தமிழாசிரியை,
ஸ்ரீ; விஜயலஷ்மி

எழுதியவர் : ஸ்ரீ; விஜயலஷ்மி (13-Nov-19, 8:29 pm)
பார்வை : 374

மேலே