யானை பாட்டு - குழந்தைகளுக்காக

யானை

ஆடி அசைந்து வருகுது
அனைவரையும் கவருது
முரசு போன்ற காதினை
முன்னும் பின்னும் ஆட்டுது
சின்னச் சின்னக் கண்களை
சிமிட்டி சிமிட்டிப் பாக்குது
வட்டமாக சுற்றியே
வாழைப் பழத்தைக் கேக்குது
பையப் பைய நடக்குது
பவ்யமாக வளையுது
முன்னங்காலைத் தூக்கியே
முதுகில் நம்மை ஏற்றுது
தொட்டுப் பாக்க ஆசைதான்
தொடவும் சிறிது பயமும் தான்
பட்டுப் பாப்பா முதற்கொண்டு
பலரும் விரும்பும் யானையே!

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்ஷ்மி (12-Nov-19, 5:03 pm)
பார்வை : 104

மேலே