என்னவளின் தோள்களில்
என்னவளின் வண்ணச்சேலையைக் களவாடியது யாரோ....!
ஏதும் அறியாதவளாய் முனுமுனுக்கிறாள்
என்னை ஏறெடுத்துப் பார்த்து ஏனோ சலிப்பு கொள்கிறாள்
நானோ அதனை அறிந்துகொள்ளும் முனைப்பாய்....
வழி நெடுகிலும் தேடுகிறேன்
வான் எல்லை வரை போய்ப் பார்க்கிறேன்....
அங்கும் இங்குமாய் காண்கிறேன் கையில் பிடிக்க தோற்றுப் போகிறேன்....
காடு மலை தாண்டிச் செல்கிறேன் காணக்கிடக்க மகிழ்கிறேன் வனம் ஒன்றில் பூக்களாய் வரைந்து கட்டி அலைகிறது வண்ணவண்ண பூச்சிகள் என்னவளின் வண்ணச் சேலையுடன்....
அதனை அள்ளிச் சேர்க்கத் துடிக்கிறேன் என்னவளின் ஆசைத் தோள்களில் அமர்ந்திடு வண்ணத்துப்பூச்சியே....!!
வேல் முனியசாமி...