“காதல் காகிதம் கவிதை”

உன்னை காணும்
வெறும் வெள்ளை காகிதம்தான் நான்

அன்று நீ வீசி
சென்ற பார்வையில்
சில துளிகளை அள்ளி
வர்ணம் பூசி கொண்டேன்
என் முதல் பக்கத்தில்....

வைரமுத்து கவிதைகள்
இனிக்கவில்லை
உனக்காய் நான் எழுதும்
சில கிறுக்கல்கள் கூட அழகாய் தெரிந்தது
ரசித்து எழுதினேன் பல பக்கம்....

நீ புன்னைகைத்து போகும் போதெல்லாம்
என் காகித பக்கங்கள்
கணக்கில்லாமல் தீர்ந்தன..

உன் ஒவ்வொரு பார்வையும்
என் எழுதுகோலுக்கு
மையிட்டு சென்றதை
நீ அறிவாயா.?...

பகலில்
இரவின் அமைதி தந்தாய்
உறங்கிய போதும்
உறவாட சில நிமிடங்கள் தந்தாய்
கனவுலகில் உன்னோடு....

இன்று மலர்ந்த
மலரல்லாம்
என்றோ மலர்ந்த
உனக்கு கீழ் என்று வர்ணித்தேன்...

உன் கூந்தலின் சில அசைவுகளில்
தென்றல் பிறக்கிறதா.?...
கேள்விகள் கூட என் கவிதைகளில்...

உன்னை ரசித்த என் கண்களுக்கு
உலகில் எதுக்கும் அழகில்லை
அதனால்தான் என் கவிதைகளில்
உன்னை தவிர வேறு எதுகுமில்லை.....

சில பொய்கள் உண்மையாய் தெரிய
பல உண்மைகள் பொய்யாக போனது
நீ என்னைவிட்டு சென்ற பொது....

யாரிடத்தில் நான் சொல்ல
இனி வாய்ப்பில்லை தப்பிப்பிழைக்க
முற்று புள்ளி வைத்து சென்றுவிட்டாய்
என் கவிதைகளுக்கு
மீண்டும் வெற்று காகிதமாகிவிட்டேன்....

காதலின் நினைவு
கண்களை தட்டும்போதெல்லாம்
திறந்து படிக்கிறேன்
என்றோ எழுதி முடித்த கவிதைகளை....

ஒவ்வொரு பக்கத்திலும்
உன் நினைவுகள்
பார்த்து பார்த்தே அழுக்ககிவிட்டது
நான் காதலை போல்...

காகிதம் கவிதை உன் நினைவு
இதுவே போதுமடி எனக்கு...

எழுதியவர் : பாலமுதன் ஆ (12-Sep-11, 12:06 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 432

மேலே