எப்பொழுது வருவான் சேலை கொடுத்த கண்ணன் இன்று🌹🌹🌹
🌹🌹🌹எப்பொழுது வருவான் சேலை கொடுத்த கண்ணன் இன்று🌹🌹🌹
காணவில்லை காணவில்லை புடவை கொடுத்த கண்ணனைக் காணவில்லை...
மாபாரதம் கட்டுக்கதையா என்று தெரியவில்லை எனக்கும் அது புரியவில்லை...
சபை நடுவே ஒருத்தியை மானபங்கப்படுத்திய போது சேலை கொடுத்தான் என்று சொல்லி னார்கள் கதையில் ஆனால் இன்றோ...
அந்தக் கண்ணனை தேடுகிறேன் கிடைக்கவில்லை...
யாரேனும் கண்ணனைப் பார்த்தால் கூறுங்களேன் கண்ணன் கிடைக்கவில்லை கற்பழிப்பு மட்டும் தொடர்கின்றது வருவானா தடுப்பதற்கு என்றும் புரியவில்லை...
அன்று சபை நடுவே நடந்த அந்த சம்பவம் இன்று ஒரு நாளைக்கு இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் ஏதேனும் ஒரு முறையில்...
கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் அவளுக்கு பாதுகாப்பு தேவை என்று காவல்துறைக்கு விண்ணப்பம் கொடுக்க வேண்டும் கண்ணன் வரமாட்டான்...
சிவமணி பரசுராமன்