உறக்கம் பிடிக்கவில்லை

உறக்கம் பிடிக்கவில்லை
=====================================================ருத்ரா

உறக்கம் பிடிக்கவில்லை தான்.
கனவில் கூட‌
நீ சினம் கொள்கிறாய்.
அதுவும் அழகு தான்.
அப்புறம்
கல கல வென்று சிரிப்பாய்
என்று பார்ப்பதற்குள்
உறக்கம் கலைந்து விடுகிறது.
அந்த படுக்கையை
உதறி உதறி தேடுகிறேன்
உன் சிரிப்பொலிகள்
உதிர்ந்து கிடக்கின்றனவா என்று?
காதலியே இன்னும் இல்லை.
நட்சத்திரங்கள் இங்கே உதிர்ந்து கிடக்குமா
என்று தேடுகின்றேன்.
வானமே இல்லையே!
அவள் அதையும் சேர்த்துக்
கொண்டு வருவாள்
என்று
சன்னல் கதவுகளை திறக்கின்றேன்.

====================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (16-Nov-19, 8:32 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 274

மேலே