பாராட்டு 👍

பாராட்டு 👍

பாராட்ட ஒரு மனம் வேண்டும்.
பாராட்டு ஒரு நல்ல இயல்பு.
பாராட்டு ஒரு அரிய கலை.
பாராட்டு ஒரு உயர்ந்த மனோபாவம்.
பாராட்டு ஒரு மானுட பண்பு.
பாராட்டு ஒரு சிறந்த உக்க மருந்து
பாராட்டு ஒரு ஊந்து சக்தி

உதட்ளவு பாராட்டு பொய்.
உள்ளத்தில் இருந்து வரும் பாராட்டு உண்மை.
பாராட்ட ஞானம் தேவை இல்லை
பாராட்ட ரசனை மட்டும் போதுமானது.
பாராட்ட தெரியாதவன்
ரசனை அற்றவன்
ரசித்தும், ருசித்தும் பாராட்ட முடியாதவன் பொறாமை உள்ளவன்.
குறைகளை சுட்டிக்காட்டி நிறைகளை பாராட்டுபவன் கைதேர்ந்த ரசிகன்.
வெறும் குறைகளை மட்டும் கண்டுபிடிப்பன்
மனநோயாளி.
இயல்புக்கு மீறி பாராட்டுவது சபை ஏற்காது.
பாராட்டு பலர் வாழ்க்கையை முன்னேற செய்துள்ளது.
எந்த ஒரு கலைக்கும் பாராட்டு இல்லை எனில் அது கலைக்கும் அழகல்ல, மானுட அறிவிக்கும் அழகல்ல.
நல்லவையை சிறு குறை இருப்பினும் பாராட்டுவதால் குறை ஒன்றும் இல்லை.
பாராட்டுங்கள். உக்கபடுத்துங்கள்.
உற்சாகபடுங்கள்.
நல்ல, நல்ல கலை வரும். வளரும்.
வாழ்க கலை. வளர்க கலைஞர்கள்.
- பாலு.

எழுதியவர் : பாலு (18-Nov-19, 6:29 am)
சேர்த்தது : balu
பார்வை : 3496

மேலே