மக்கள் முதல்வர் ரங்கசாமி 3

ரங்கநாதசாமியும் ரங்கசாமியும்

அவர்
பூமியை ஆண்டவர்
இவரும் ஆண்டவர்தான்
புதுவையை ஆண்டவர்

அவர்
திருச்சியில்
பள்ளி கொண்டவர்
இவர் திலசையில்
பள்ளி கொண்டவர்

அவர்
கருவறையில்
இருப்பவர்
இவர்
கருவறையில்
இருந்தவர்

அவர்
இரு பெண்ணை
மணந்தவர்
இவரோ
ஏழைக்காக பெண்ணை மணக்காது
இந்த
மண்ணை மணந்தவர்

நடேசன்
அவருக்கு மாமன்
இவருக்கோ தந்தை

பாஞ்சாலி
அவரின் தங்கை
இவருக்கோ அன்னை

அதிகேசவனுக்கு
அவர் கண்ணன்
ஆதிகேசவன்
இவரின் அண்ணன்

அவர்
திரியனையில் எரியும் ஒளி
இவர் அரியணையில் ஏறி
ஏழைக்குக் கொடுத்தார் ஓளி

அவர் பூமியைக் காக்க
எடுத்த அவதாரம் நரசிங்க சாமி
அவரே புதுவையைக்
காக்க எடுத்த அவதாரம்தான்
ந. ரங்கசாமி

நமச்சிவாயம்
அவரின் மாமன்
இவர்
நமச்சிவாயத்திற்கு
மாமன்
இவரால்
புதுவை ஆனது மாமன்

அவர்
பால முருகனுக்கு வேலை
கொடுத்தவர்
இவர் பல முகங்களுக்கு
வேலை கொடுத்தவர்

நீ இந்திராகாந்தி மருத்துவமனை
கட்டிக்கொடுத்த
இந்திராநகர் காந்தி

உன்னால் ஏர் பிடித்த
கைகள்கூட இன்று
ஸ்டெதெஸ்கோப் பிடித்துக்கொண்டிருக்கின்றது

விண்ணிலிருந்து
காமராசர் கைநழுவிய
எழுதுகோல் நீ
மண்ணிலிருந்து மக்களுக்குப்
பணிசெய்ய எழுந்த கோள் நீ

உன் கைகள் சற்றே
குட்டையானது
ஏழைகள் கண்ணீர்
துடைப்பதில்
கைக்குட்டையானது

உன் பேனாவில்
மை குறையும்போதேல்லாம்
மக்களின் வறுமையும் குறைந்தது

நீ முதல்வர் நாற்காலியில்
அமர்ந்த நேரத்தைவிட
மக்களோடு அமர்ந்த
நேரமே அதிகம்

இளம் வயதில்
அனைவரும்
பூக்களை நேசித்துக்கொண்டிருக்க
நீ மட்டும்
மக்களைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தாய்

மாணவர்களுக்கு
காலை உணவாகப் பால்
கொடுத்தாய்
மக்களுக்கு
வேலை கொடுத்து
உன் தோள் கொடுத்தாய்

மக்கள் முதல்வரே
நாங்கள்
இருக்கிறோம் உங்கள்
பின்னால்
அடுத்த ஆட்சி
ஓடிவந்து நிற்கும்
உங்கள் முன்னால்

எழுதியவர் : புதுவைக் குமார் (18-Nov-19, 7:37 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 191

மேலே