கடைசரக்கு
கடைசரக்கு
தாயின் தாலாட்டில்
தங்கத் தமிழ் மகன்
மன்னாதி மன்னன்
தந்தையின் புகழுரையில்
சங்கத் தமிழன்
கல்லூரியில் இவனுக்கு
தலைவன் என்றொரு பட்டம்
ஊராரின் பலருக்கு
ஒழுக்கமான நண்பன்
இவ்வாறு இருந்தும்....
கன்னி ஒருத்தி முன்
வரதட்சணை சந்தையில்
கடைச்சரக்காகி நிற்பதேன்?!