அம்மா🤱🏼
உன்னோடு வாழ்ந்த நாட்கள்
உயிரை உணர்ந்த நாட்கள்
நினைத்து நினைத்து பார்கிறேன்
என் நிழல்கூட உன்னைத்தானே
நினைவூட்டுகின்றன
என் மூச்சுகாற்றுக்கூட
முட்டி முட்டி மோதுகின்றன
உன்னினைவால்
அடுக்களையில் நீதான்
மழலை அரவணப்பில் நீதான்
கிறுக்கும் பேனாவில் நீதான்
திரும்பும் திசையெல்லாம் நீ
என் செய்வேன்
உனருகிருந்து உனக்குணவூட்ட
நானில்லை உன்னருகில்...
தவிக்கத்தான் முடிகிறது
இத்தூரதில் நானிருந்து!