நட்பு 🐀🐁
புரிந்துணர்வு மிக்க உயிர்
பரிவுக்கு உகந்த வரம்
உயிரோடு உணர்வு கலந்த
உன்னத மொழி
அலட்டல், அன்பு, பரிவு, பிணைப்பு
உண்மை, உவகை, கண்டிப்பு, கரிசனை
அத்தனையும் சுகமாய் ஏற்கும்
துயர் துடைக்க துடிப்புடன் புறப்படும்
தூய்மையான உறவு
தாய் மடிக்கு நிகரானது-ஆமாம்
அதுதான் நட்பு!