அன்பை தருவாயா அன்பே

தேயாத நிலவே தெவிட்டாத மாங்கனியே
காயாத மலரே கண்கொள்ளா பெண்ணழகே
சாயாத மரம்போல என்நெஞ்சம் எந்நாளும்
ஓயாமல் உன்னையே நினைத்து உருகுதடி
தாயாக உன்மடியை எனக்குத் தாராயோ
சேயாக நினைத்து அணைக்கவே வாராயோ

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (19-Nov-19, 6:11 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 330

மேலே