மகள்🤗

மகள்
———

கருவுற்ற நாள் முதல்
கனவுகள் பல சுமந்து
பத்திரமாய் உனை பெற்று
பகலிரவாய் கண்விழித்து
பக்குவமாய் உனைக்காத்து

அவள் முதல் சிரிப்பு, முதல்சொல்
முதல்பல், முதலடி- என
முத்து முத்தாய் ரசித்தாலும்
நாளொன்று நகர வயதொன்று கூட

பருவ மாற்றத்தால் - பல
மாற்றங்கள் மகளிடத்திலென்று
மனது புளுங்க- ஆனாலும்
அவள் அடியோசை கேட்டால்

சிந்தனை யாவும் சிதறுண்டு
மகளென்ற மந்திரம் மட்டுமே
மணியாய் ஒலித்திடும்
மற்றவை யாவும் புயலாய் பறந்திடும்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (19-Nov-19, 8:35 pm)
பார்வை : 2831

மேலே