ததாகதர்

__________________________

வெளிச்சம் கனத்து
பரவி முடித்தபின்
எனது அறையை இறுக்க
மூடி கொள்கிறேன்.

ஒளி புகாதபடி
காற்று பரவாதபடி...

என்னையே அவர்கள்
பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இருண்ட அறைக்குள்
விழிப்பும் உயிர்ப்புமாய்
நான் இருந்தபோதிலும்
நானும் மனிதனென்ற
சிந்தனை சிதைவது கண்டு
நிம்மதி கொள்ள முடிகிறது.

நான் அவனுக்காகவும்
நான் அவளுக்காகவும்
சிரம் தாழ்த்தியதும் போரிட்டதும்
அறையின் இருளுக்குள்
முடிவுக்கு வந்திருந்தது.

வெளியில் எண்ணற்ற
நிறம் மிகுந்த ஒளி பொருந்திய
கூச்சல்கள்... அதில்
அலைந்து திரிந்து அலைந்து
முதுமையாகிய புத்தனின்
பழைய கனவொன்றில்
நானும் வந்து செல்கிறேன்.

யசோதைக்கு இருந்த
அத்தனை குரூர பைத்தியமும்
என் அறைக்குள் அவ்வப்போது
கிறீச்சிடும் ஒளிக்கும் இருந்தது.

இருள் தெப்பமான பின்
காலங்களை குடைந்து கடக்க
நான் மனிதனென்ற அறிவீனம்
களைத்து பின் வாங்கியது.

அசையாத பயணத்தில்
காற்றும் ஒளியும்
சீழ் வடித்த நேரத்தில்
என்னுடன் இருந்த என்னை
விலக்கி பயணிக்கிறேன்.

புத்தனை கைவிட்ட யசோதை
எனக்கப்பால் செல்கிறாள்.

என்னையே அவர்கள்
பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்கள் தங்களை
நகல் எடுப்பது
தங்களிடமிருந்துதான்...

எழுதியவர் : ஸ்பரிசன் (19-Nov-19, 9:33 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 160

மேலே