புருச்சு புருச்சு

யாரடி அவ 'புருச்சு, புருச்சு'ன்னு சொல்லிட்டு திரியறவ?
@@@###
உங்க பேரன் மனைவி கனிஷ்கா. 'புருஷோத்தமன்'. அவனைத்தான் எம் மருமகள் 'புருஷ்'ன்னு கூப்படறா?
#@@@@@
நான் அவுனுக்கு பேரு வைக்கிறபோதே சொன்னேன். 'புருச்சோத்தமன்'ன்னு வைக்காதீங்க. எதிர்காலத்தில யாராவது அவம் பேரைச் சுருக்கி 'புருச்சு'னு கூப்புடுவாங்கனு. யாரை எம் பேச்சைக் கேட்டீங்க?
@@@@@@
அம்மா உங்க பேரனே அவம் பேர 'புருஷ்'ன்னு மாத்திட்டான். சிலர் 'கிருஷ்ணன்'ங்கிற பேரை 'கிருஷ்'னு கூப்படறாங்க.
@@@@@@
எல்லாம் காலம் மாறிப்போச்சு. எல்லாம் குறுக்குவழி. சுருக்கு வழி. தாய்மொழில யாரு பேரு வைக்கிறாங்க. 'புருச்சு, புருச்சு' சொல்லறதுக்கு ரொம்ப இனிப்பா இருக்குதடி. அவன் புருச்சு. அவனைக் கட்டிகிட்டவ கனிச்சுக்கா. நல்ல இருக்குது
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆
Purush = omnipotent personality

எழுதியவர் : மலர் (22-Nov-19, 7:44 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 148

மேலே