அருகில் வந்தாள் எனை நான் மறந்தேன்

கயல்கள் துள்ளும் விழிகள்
பிறையால் செதுக்கிய செவிகள்
ரோஜா இதழில் வெண்மை சிவந்து
சங்கு மின்னல் ஒளிர்ந்தது கழுத்தில்
தமிழ் பேசும் அவள் குரலை
தன்னை மறந்து குயில் ரசிக்க
நதி ஓடும் நீர் போலே
எழில் விரிந்து இளமை வழிந்தது
மனதை மயக்கும் மல்லிகை வாசம்
உடலம் எங்கும் நின்று வீ ச
அருகில் வந்து அவள் நின்றாள்
மலர் மதுவை உண்ட வண்டாக
மனது மறந்து நான் நின்றேன்
அஷ்றப் அலி