உறுதிச்சொல் சேர்பவன் தக்கான் தரும உரைக்கு – அறநெறிச்சாரம் 6
நேரிசை வெண்பா
தடுமாற்ற மஞ்சுவான் தன்னை யுவர்ப்பான்
வடுமாற்ற மஞ்சித்தற் காப்பான் - படுமாற்றால்
ஒப்புரவு செய்தாண் டுறுதிச்சொல் சேர்பவன்
தக்கான் தரும உரைக்கு. 6
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
தன் சோர்வு படுதலுக்கு அஞ்சுபவனும், பிறர் தன்னைப் புகழுங்கால் அதனை வெறுப்பவனும்,
பழி வராமல் தன்னைக் காத்துக் கொள்பவனும், தன்னால் இயன்றவளவு பிறருக்கு உதவிசெய்து அந்நிலையிற் பெரியோரிடம் உறுதி மொழிகளைக் கேட்டு அதன்வழி நிற்பவனுமாகிய ஒருவன் அறநூல் கேட்டற்கு உரியவனாவான்.
குறிப்பு:
ஒப்புரவு - யாவர்க்கும் ஒருபடித்தாய் உதவி செய்தல்.