காதல் சிறகாக சிறு கதை ,

தேடவில்லை ஒன்றும் அவன் ஏன்/
அவன் படிப்பில் அவ்வளவு ஆர்வம்
வேறு சிந்தனையில் அவன் எண்ணங்கள் செல்லவில்லை ,
ஆனாலும் அவனை விதி விடவில்லை சுற்றி சுற்றி வந்தாள் ஒருத்தி
அவள் பெரிய அழகியுமல்ல ஆனால் நல்ல குணமான பிள்ளை நல்ல இடத்துப் பிள்ளைதான்
அவனுக்கு அவளை பற்றி எதுவும் தெரியாது ஆனாலும்
அவன் நெஞ்சமோ மென்மையானது என்பது இவளுக்கு மட்டும் புரிகிறது

கல் மனமாக இருந்திருந்தால்
அவள் நினைவினை அவன் தூக்கி வீசியிருப்பான் அல்லவா/
அவன் வளர்ந்த சூழல் ,அவனை வளர்த்த விதம் அப்படி
அன்பிலே ஆரோக்கியமாய் வாழ்ந்த குடும்பத்தில்
வாழ்ந்தவன் அவன் ,வெளுத்ததெல்லாம் பால் போன்று நினைக்க கூடிய மனப் பக்குவம் கொண்டவன்
ஆனால் படிப்பில் மட்டும் ,அவனை எவரும் தொட்டுவிட முடியாது .இப்போதுதான் அவனுக்கு சோதனைக்காலம் ஏன்/ காதல் என்னும் வண்ணப்பறவை அவனிடம் ,,
அவளைப் புறந்தள்ள அவனுக்கு இயலவில்லை , தாங்காத அவனும் மனுஷன் தானே
பாழாய் போன எண்ணங்களில்
சிறுக சிறுக இனிமைதரும் நினைவுகள் வந்து வந்து போகின்றன யூகித்தான் இதுதான் காதல். சிந்திக்கின்றான் ஏனெனில் அவன் மதம் கத்தோலிக்க மதம்,
அவள் சுத்த சைவ மதம் இருமதங்களும் இணைவது சாத்தியமில்லை
ஆனால் அவர்கள் மனம் இரண்டும் இணைகின்றதே
அவனின் பெற்றோருக்கு தெரியாமல் அவள் பெற்றோரின் முன்னால் அவர்கள் வீட்டிலே பதிவுத் திருமணம் செய்கிறார்கள் . இது எதுவும் அவன் பெற்றோருக்கு தெரியாது
அவனின் ஒரு அக்கா குடும்பம் மட்டும்
அவர்கள் திருமணத்திற்கு சென்றிருந்தார்கள் ஏனெனில் அவர்கள் அவளின் நாட்டிலே வசித்து வந்தார்கள் , அவர்கள் அவர்களை வாழ்த்தினார்கள், காதல் என்பது எவரும் சொல்லி வருவதில்லை
காதல் வந்துவிட்டால் அந்த இருவர் மட்டுமே உலகில்
வாழத் தெரிந்து விட்டால் வாழ்கை சுகமாக, காதல் சிறகாக ,,,,
உண்மைக் கதை

எழுதியவர் : பாத்திமாமலர் (2-Dec-19, 1:18 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 543

மேலே