நள்ளிரவு திருமணமமும் - பதவியேற்பு விழாவும்

நள்ளிரவு திருமணம் மற்றும் பதவியேற்பு விழா அழைப்பிதழ்
@@@@@@@@@@
திருமண மண்டபம் ஒன்றில் நள்ளிரவில் மேடையில் மணமகன், மணமகள் மற்றும் சம்பந்திகள், பெண் தோழி, மாப்பிள்ளைத் தோழன் ஆகியோர்)::
■■■■■■■■
மணமகளின் தந்தை:
அன்பிற்குரிய சம்பந்தி வீட்டார்களே, எங்கள் உறவுகளே, நண்பர்களே, அரசியல் தலைவர்களே, அதிகாரிகளே, என் மகள் இன்பவள்ளியின் திருமண விழாவிற்கும் என் மாப்பிள்ளை இளவரசனின் பதவியேற்பு விழாவிற்கும் வருகை தந்து சிறப்பிக்கும் உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு கலந்த நன்றி
@@@@@@
(கூட்டத்திலிருந்த ஒருவர்)
அது என்னங்க நள்ளிரவு திருமணம்? யாருடைய பதவியேற்பு விழா?
@@@@@@@@@
நள்ளிரவு திருமணம்: நாங்கள் ஆந்திராவில் பிறந்து வளர்ந்த தமிழர்கள். கடந்த ஆறுமாதங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் குடியேறினோம்.
ஆந்திராவில் பலர் நள்ளிரவில் தான் திருமணத்தை நடத்துவார்கள். நள்ளிரவு ஆரவாரம் இல்லாத அமைதியான நேரம். அந்த நேரத்தில் மணம் புரிவோர் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது உறுதி.
பதவியேற்பு விழா: மாப்பிள்ளை இளவரசன் என் மகள் இன்பவள்ளியை மணமுடிப்பதுடன் 'இல்லத்தரசர்' என்ற பதவியையும் ஏற்றுக்கொள்கிறார். இந்த இருவிழாக்களையும் சிறப்பிக்க வந்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் எங்கள் அன்பு கலந்த நன்றி.
இப்போது திருமண பதிவேட்டில் சாட்சிகள் முன்னிலையில் மணமக்கள் கையொப்பமிடுவார்கள்.
அடுத்ததாக நமது நகரத் தலைவர் தலைமையில் பதவியேற்பு விழா:
@@@@@@
நகரத் த்தலைவர்:
இளவரசன் என்ற மணமகனாகிய நான்.....
@@@@@@
இளவரசன்:: இளவரசன் என்ற மணமகனாகிய நான் இன்பவள்ளியை என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டேன். நான் இந்த நொடிமுதல் இன்பவள்ளி அவர்களின் இல்லத்தரசன் என்ற பதவியை உளப்பூர்வமாக ஏற்று அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவருக்கு உற்ற துணைவனாக இருந்து அவர் ஒருபோதும் கண்ணீர் சிந்தாமல் வாழ அவர் இட்ட பணிகளை செம்மையாகச் செய்வேன் இன்று உங்கள் அனைவரின் முன்பு உறுதியளிக்கிறேன்.
#@@@#@@
மணமகளின் தந்தை::
இருவிழாக்களும் இனிதே நடந்தன; அனைவரும் நள்ளிரவு சிற்றுண்டியை உண்டபின் மரக்கன்றுகளை தாம்பூலமாகப் பெற்றுச் செல்லும்படி அன்புடன் வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.

எழுதியவர் : மலர் (1-Dec-19, 12:59 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 208

மேலே