இலக்கிய இணையர் படைப்புலகம் பேரா மோகன் – பேரா நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு தொகுப்பு கவிஞர் இரா இரவி நூல் மதிப்புரை முனைவர் ஞா சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை

இலக்கிய இணையர் படைப்புலகம்!


(பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு)
: கவிஞர் இரா. இரவி !

நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர்
தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை




நூல் பதிப்பகம் : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.

பக்கங்கள் : 230. விலை : ரூ.175/-
*****

மகுடங்களுக்கு மகுடம் !



இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டே இருக்கும் செயல்வீரர் நண்பர் கவிஞர் இரா. இரவி அவர்கள். தான் ஏற்றுக்கொண்ட எந்தப் பணியாக இருந்தாலும் நேர்த்தியாக செய்யக்கூடிய நேர்மையான மனிதர். மதுரையில் இலக்கியக் கூட்டங்கள், தன்முன்னேற்றக் கூட்டங்கள், வழிகாட்டல் அரங்கங்கள் எங்கு நடந்தாலும் அங்கு முன்வரிசையில் முதலில் இருக்கக்கூடிய தமிழ் ஆர்வலர்.



இன்றைய இளைய தலைமுறையினருக்கு வாசிக்கும் பழக்கம் வளர் வேண்டும் என்பதற்கு பள்ளிகள், கல்லூரிகள் சென்று அங்குள்ள நூலகங்களுக்கு நூல்கள் பல வழங்கிய புத்தக மேதை இவர்.



இந்த இனிய மனிதரின் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக ; வழிகாட்டியாக இருந்தவர்கள் நம் இலக்கிய இணையர் மதிப்புமிகு அய்யா தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன், அம்மா தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக ‘இலக்கிய இணையர் படைப்புலகம்’ எனும் நூலினை வெளியிட்டுள்ளார்.



இவர்களின் ஐம்பது நூல்களுக்கு கவிஞர் இரா. இரவி வழங்கியுள்ள மதிப்புரைகளைத் தொகுத்து இலக்கிய இணையருக்கு மகுடம் சூட்டியுள்ளார். இதன் மூலம் இவர்கள் மீது இரவி கொண்டுள்ள பாச உணர்வு வெளிப்படையாக தெரிகிறது. இவர்களின் அன்புறவு கண்டு வியந்து போகிறேன்.



இந்நூலினை வாசித்தாலே ஐம்பது நூல்களை முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. ‘ஐம்பது நூல்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்’ என்றே சொல்லலாம். இதற்காக இவருக்கு முனைவர் பட்டமே வழங்கலாம். மகுடங்களுக்கு மகுடம் சூடிய கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி வாழ்த்துகள் பல ...

****

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (4-Dec-19, 12:44 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே