ஐய்யப்பன் தெய்வமா

ஐய்யப்பன் தெய்வமா ?

தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளில் மறு பிறப்பைப்
பற்றியும் ஏழு பிறப்பைப் பற்றியும் 20 குறள் களுக்கும் மேல் சொல்லி
யுள்ளார். ஆக திருவள்ளுவரை மதிப்பவர்களும், நம்புபவர்களும்
இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். மனிதன் சிந்தனைக்கு சில
விஷயங்களை அவன் ஆராய் ந்து தெரி ந்து கொள்ளட்டும் என்று
விட்டுவிட்டான். அதில் கடவுள்களையும் சம்மந்தப் படுத்தி
விட்டான். நான் ஏற்கனவே வினாயகர் அவதாரத்தைப் பற்றி இதேத்
தளத்தில் கவிதை பகுதியில் பாடலாய் வெளியிட்டுள்ளேன்.
இருப்பினும் இப்பொழுதுகட்டுரையிலும் வெளியிடுகிறேன்.
விரும்புபவர்கள் படிக்கலாம்.

வினாயகன் கடவுளின் படைப்பில் பிறப்பை விளக்க வந்த
பெரும் அவதாரம்.
அவரின்இரு தந்தக் கொம்புகளில் ஒன்று சிறியது ஒன்று பெரியது.
பெரிய தந்தம் ஆணையும் சிறிய தந்தம் பெண்ணையும் குறிக்கும்.
மனிதன் ஆணாகப் பிறந்தவன் மறு பிறப்பில் பெண்ணாகவும்
பிறக்கலாம் என்பதை விளக்குகிறது, மேலும் வினாயகனின் உடல்
மனிதனாகவும் யானையின் தலை மிருகமாகவும் காட்டு கிறது.
இது மனிதன் மறு பிறப்பில் மனிதனாகவும் பிறக்கலாம் அல்லது
மிருகமாகவும் பிறக்கலாம் என்பதை விளக்குகிறது. ஆக வினாய
கனின் அவதாரம் ஒரு ஆத்மாவானது , ஆண் ,பெண், மனிதன்
மற்றும் மிருகமாகவும் பிறகக்கலாம் என்பதையே விளக்குகிறது .
மேலும் இந்த மிருகம் ஆண், பெண் ஆத்மாக்கள் மறுபிறப்பில்
எப்படி வேண்டுமானாலும் பிறக்கலாம் என்பதையே விளக்குகிறது.
யோனிகள் மொத்தம் நான்காகும் . அவை முறையே 1.கருப்
பையினம் 2.முட்டையினம் 3.சுவேதனம் என்கிற அற்புதமான
வியர்வையில் கருதரிப்பு 4. விதையினம் ஆகும்.

பரம்பொருளான மகாதேவனைத் தவிர மற்ற சிவன்
பிரும்மா விஷ்ணு ஆகிய எல்லா தெய்வங்களுக்கும் இது பொருந்
தும் என்பதைமனிதர்களுக்கு விளக்குவதற் காகவே எடுத்த
அவதாரமே ஐய்யப்பனின் அவதாரம். இந்த அவதாரங் களைப்
பார்த்து மனிதன் தன்னுடைய மனித ஆத்மா ஆணாகவோ
பெண்ணாகவோ தவிர்த்து தேவர்களாவோ, மிருகனமாகவோ
பறவையாகவோ, கடல் வாழ் ஜென்மமாகவோ, ஊர்வனமாகவோ
பிறக்கலாம் என்னும் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல்
ஐய்யப்பன் சிவனெனும் ஆணிற்க்கும் மால் எனும் ஆணுக்கும்
பிறந்தவன் என்று கிண்டல் பேசுகிறார்கள். இது யோசிக்காமல்
பேசும் முட்டாள்களின் பேச்சாகும். விஷ்ணு இதில் மோகினிப்
பெண்ணாக மாறிச் சிவனுடன் சேர்ந்திட ஐயப்பன் பிறக்கிறான்.
சிவன் எனும் ஆணும் மால் எனும் ஆணுமா சேர்ந்துமா ஐயப்பன்
பிறக்கிறான். இதில் முட்டள்கள் கிண்டலடிப்பதுஎதற்காக ?
கடவுள். முப்பெரும் தேவர்களும் ஆத்மாகளே . பரம்
பொருளொன்றே பரமாத்மா என்பதைத் தானே சைவம்
போதிக்கிறது. அதற்குத்தான் ஆண் பெண் தேவர் மிருகம் ,
கடல் வ.ாழ்வன, ஊர்வன பறப்பனதாவரங்கள் போன்ற
பிறப்புகள் கிடையாது, பரமாத்மாவின் பெரு வெள்ளத்தின்
பெருந்துளிகளே முத்தேவதைகளான சிவன் மால் விஷ்ணு
மற்றும் என்பதை உணராமந்த புத்தியாளர்களே கிண்டலடிப்
பவர்கள் .

சித்தர்களின் மூத்த சித்தர் அகத்தியர் சொல்கிறார்
பல லட்சம் வருட ங் களுக்குஒருமுறை சிவன் மாறுவாரா.ம்
சிலலட்சம் வருடங:ளுக்கு ஒருமுறை விஷ்ணு மாறுவாராம். பல ஆயிரம் ஆண்டுக்கொருமுறை பிரம்மன் மாறுவாராம்.
சில லட்ஷம் இப்படி ஒவ்வொரு கடவுளர் பதவிகளுக்கும் பதவிக்
காலம் உண்டாம். இ ந்திரன் பதவிமாறினால் இந்திராணிக்கு
வேறு இந்திரன் கண்வன் என்று கிண்டல் செய்தவர்கள்
தான் பகுத்தறிவுவாதி. இந்திராணிக்கும் பதவி காலம்
உண்டென்று அவன் யோசிக்க மாட்டான். இதெல்லாம் இந்து
மதத்தில் உலக இயக்க ங் களின் தாத்பரியங் களை சித்தர்கள்
வெளியிட்டதனால் வ ந்த வினை. வேறெ ந்த மதத்திலும் இ ந்த
உண்மையைக் கண்டு பிடித்தாருமில்லை சொன்னாருமில்லை.
இந்த காரணத்தால் தான் பகுத்து அறி ந்தவன் கேலி பேசுகிறான்.
ஆனால் அவன் ஆராய மாட்டான். அறிவீலி.சைவத்தை நன்றாகப்
படியுங்கள், முட்டள்கள்போல சிரிக்காதீர்கள். ஐயப்பனும்
வினாயகனும் தெய்வங்களே !! சி ந்தித்துச் செயல்படுங்கள்

எழுதியவர் : பழனி ராஜன் (4-Dec-19, 5:41 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 49

மேலே