மரணத்தின் வாசம்

பிறப்பை கடவுள் தீர்மானித்தான்
இறப்பை மனிதன் தீர்மானித்துக்கொண்டான் ...

கவலைகளை கொஞ்சமாய் மறக்க
கல்லறையை முழுதாய் அரவணைத்தான் ...

சூழ்நிலையை காரணம் காட்டி
சுயநிலையை இவன் இழந்தான் ...

சிறு பொழுது மகிழ்ச்சிக்காக
சில்லறைகளை வீசி எறிந்தான் ...

மனதை மயக்கும் புகையிலையில்
வாழ்வை மறைத்து வைத்தான் ...

சுற்றத்தாருக்கும் நோய் தந்து
புகைக்காமல் புகைய செய்தான் ...

புகையிலையின் துணிக்கைகளை
மரணத்திற்கு காணிக்கையாக்கினான் ..

கைபிடித்து நடக்க
குழந்தை அங்கே காத்திருக்க
இவனோ
புகைபிடித்து நடக்கிறான்
குழந்தையை மறந்து ...

உனக்கு என்னை கொடுத்து
எமனுக்கு உன்னை கொடுப்பேன் என்று
சொல்லாமல் சொல்கிறது
காற்றில் கரையும் புகை ...

புகை நமக்கு பகை
என்பதை மறந்து
தீ எனும் அன்பை தந்து
அரவணைக்கிறான் இருவிரல் இடுக்கில் ...

பாசம் காட்ட உறவுகள் காத்திருக்க
மரணத்தின்
வாசம்தனை இவன் நுகர்ந்தான்...

மரணத்தின் வாசம்தனை இவன் நுகர
இவனது உயிரை எமன் நுகர்ந்தான் ..

இவனது உயிரை எமன் நுகர
குடும்பத்தின் வாழ்வுதனை இருள் சூழ்ந்தான்...

புகை புகைத்தவனுக்கு இழவு
அதை விற்றவனுக்கு வாழ்வு ..

எழுதியவர் : ரஞ்சித் வாசு (7-Dec-19, 11:07 am)
சேர்த்தது : Ranjith Vasu
Tanglish : maranthin vaasam
பார்வை : 332

மேலே