அறுசுவையும் ஆனந்தமே
சுவைகள் ஆறிலுமே சூழ்ச்சமம் உள்ளதடா
இனிப்பு சுவை நமக்கு இயக்கத்தைக் கூட்டிடுமே
கசப்பு சுவை நம்மை காப்பாற்ற வந்ததடா
புளிப்பு சுவை நம்முள் சளியை ஊக்கப்படுத்தும்
கார சுவை நம்மை வீரனாய் ஆக்கிவிடும்
துவர்ப்பு சுவை தானே உடல் எதிர்ப்பு திறனுக்குரியது
உவர்ப்பு சுவையன்றி உடல் உணவை இரசிப்பதில்லை
இயற்கையில் கிடைக்கும் சுவை எந்நாளும் நல்லது
செயற்கையில் கிடைப்பதெல்லாம் கேடு நிறைந்தது
பல்வேறு சுவைகளையும் பகுத்து உண்டு வந்தால்
பல வகை நோய்களையும் பலமிழக்கச் செய்திடலாம்
---- நன்னாடன்.