காதல் சொல்ல வந்தேன்-22

காதல் சொல்ல வந்தேன்-22
உள்ளத்தில் உள்ளதை
உன்னிடம் சொல்ல
தனிமையில் ஒத்திகை
வார்த்தைகள் சரளமாக
ஓடியது வெட்கம்
ஒத்திகையில் தடையின்றி
உன்னைக் கண்டதும்
தாமதியாது
வெளிப்பட்ட வெட்கம்
ஓரம்போன ஒத்திகை
ஊமையாகிய நான்
இப்படியே என்னை
அலைகழிக்கும்
உன் அருகாமை ரொம்ப
இனிக்கும்
காரணம் உன்னை எனக்கு
ரொம்பப் பிடிக்கும்..,