ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

நகை அணியவும்
பட்டு அணியவும் பணம்
விளம்பர நடிகை !

பெருகிவிட்டனர் பழம் தின்று
கொட்டை இட்டவர்கள்   
அரசியலில் !

நடிகர்கள் மட்டுமல்ல
அனைவரும் நடிக்கின்றனர்
ஊடகத்தின் முன்னே !

அரிசி கொண்டா  உமி தாரேன்
ஊதி ஊதி தின்னலாம்
தொடரும் ஏமாற்றம் !

குரங்கு அப்பம் பங்கு
கதையாக முடிந்தது
தேர்தல் !

முதல்வர் சண்டையில்
அமைச்சரையும் இழந்து
வென்றவர் தோற்றனர் !

சில நேரங்களில்
விபரீத முடிவாகிறது
தேர்தல் முடிவு !

பேராசை  பெரு நட்டம்
பட்டும் உணர்வதில்லை
சிலர் !

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவது
வாடிக்கை அரசியலில் !

இன்பம் பகிர இரட்டிப்பாகும்
துன்பம் பகிர பாதியாகும்
துணையிடம் !

ரசிக்கத்தான்
பறிக்க அல்ல
மலர்கள் !

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
பாடியபடி நடக்க வேண்டியுள்ளன
சாலைகள் !

தானியில் ஏறினாள்  
தானாகப் பிரசவம்
சாலைகளின் நிலை !
.

எழுதியவர் : வாழ்க்கை (9-Dec-19, 12:51 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 230

மேலே