மன்னிப்பு தமிழ் சொல்லா
ஒரு மொழியானது தனக்குள்ளாகவே சொல் வளம் மிகுந்துஇருப்பது ,அதிலும் நம் தமிழைப் போன்ற தொன்மையான மொழியில் சொற்களுக்கு வறுமையே இல்லை . தமிழில் மூன்று லட்சம் முதல் ஆறு லட்சம் வரையிலான சொற்கள் இருந்தன என்கிறார்கள் . ஆனால் , தமிழ் மொழி அகராதிகளில் கூட அறுபதாயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான சொற்கள் தாம் பட்டிலடப்பட்டிருக்கின்றன .
மீதமிருந்த சொற்கள் என்னவாயிற்று ? பயன்படுத்தாமல் அழிந்தன . வழக்கத்தில் இல்லாமல் மறைந்தன . ஏடுகளிலும் இலக்கியங்களிலும் இடம் பெற்றிருந்த சொற்கள்கூட அவற்றைப் பதித்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளின் அழிவால் காணாமல் போயின .
அழிவு மட்டுமின்றி காலந்தோறும் பிறமொழி சொற்களும் தமிழோடு தொடர்ந்து கலந்தன .பிறமொழி ஆட்சியாளர்கள் அவ்வாறே வடமொழியும் உருதும் தொடர்ந்து கலந்தன .இந்த கலப்பானது சிறிய காலப்பரப்புக்குள் நிகந்தழுவிடவில்லை .ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்தது .
இன்றைக்கு தமிழில் கலந்துள்ள ஆங்கில சொற்களை எளிதில் அடையாளம் கண்டுபிடுத்துவிடலாம் . காபி ,டீ, பஸ் ,ஸ்கூல் சைக்கிள் என்று பல ஆங்கிலச் சொற்களை நாம் அன்றாடம் பயன்படுத்தினாலும் அவை ஆங்கிலச் சொற்கள் என்பது நமக்கு நன்கு தெரியும் .
ஆனால் தமிழில் கலந்துள்ள வடமொழி உள்ளிட்ட பிறமொழிச் சொற்களை அறிந்து களைவது நம்மில் பலர்க்கும் கடினமாக இருக்கிறது .தமிழில் பல உருது , சொற்களும் கலந்து தான் இருக்கின்றன . குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பேசப்படும் தமிழில் பல சொற்கள் உள்ளன .இவை எல்லாம் சொல்வழக்கில் தினமும் அப்படியே பயன்படுத்தப்படுகின்றன வழிமூலம் தெரியாமல் .
"மன்னிப்பு " என்பது உருதுமொழிச் சொல் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? இந்த் சொல் பல திரைப்படங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது .மன்னிப்பு -- இந்த சொல்லுக்கு நேரான தமிழ் சொல் " பொருத்தருளல் " என்பதே . இதனை "மொழிஞாயிறு " தேவநேயப்பாவாணர் ஆராய்ந்து கூறிய பிறகே நமக்கு தெரிய வந்தது . மன்னிச்சுக்குங்க என்று கூறாமல் "பொறுத்துகுங்க என்று கூறலாம் .
அவசரம் ,ஆசை ,இராணுவம் , ஈனம் , உச்சி , சங்கீதம் ,சஞ்சலம் ,சந்தர்ப்பம் ,சோதனை ,தகனம் ,தந்தம் , நகல் ,நயனம் ,நீதி ,பரம்பரை ,பலன், வசந்தம் , வீரம் போன்ற சொற்கள் தமிழ் சொற்கள் அல்ல . அவை வட மொழி சொற்கள்.
வியப்பாக இருக்கிறதா ? ஆம் ! அவை வட மொழி சொற்கள் தான் . ஆனால் அதற்க்கான எந்த தடயத்தையும் காட்டவில்லை .வடமொழியிலும் அதே பொருளில் அச்சொற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன .வடமொழி சொற்களில் பெரும்பாலானவை தமிழ் சொற்களை போலவே இருப்பதால் நமக்கு குழப்பம் வருகிறது .பல வட மொழி சொற்கள் தமிழ் மொழிக்கு ஏற்ப ஓசை தமிழ் படுத்தப்பட்டுவிட்டது .
ஒரு மொழியில் சொற்கள் எவ்வாறு தோன்றுகின்றன , அவற்றின் தோற்றுவாய் தென்படுகிறதா , வேர்த்தன்மை உள்ளதா என ஆராய்ந்து ஒரு சொல் அம்மொழிக்குரியதா ,இல்லையா என்பதை கண்டுபிடிக்கிறார்கள் . தமிழில் கலந்துள்ள வட சொற்கள் யாவை ? அவற்றை எப்படி கண்டறிவது ? அவ்வாறு கண்டறிவதற்கு ஏதேனும் வழிமுறை உள்ளதா ? ஒவொவ்ரு வடசொல்லுக்கும் இணையான தமிழ்ச்சொல் என்ன ? பல வினாக்கள் தோன்றுகின்றன . அதற்க்கான விடை ,மொழியடிப்படையை கற்பதில் இருக்கிறது .ஒவொவ்ரு மொழியிலும் உள்ள சொற்களின் வேர்த்தன்மையை அறிவதில் இருக்கிறது .சொற்பொருள் அறிவைப் பெருக்கிக்கொள்வதில் இருக்கிறது .அவற்ற்றை ஒவொன்றாகப் பார்க்கப்போகிறோம் .
சில வட மொழி சொற்களிலும் அவற்றுக்கு நேரான தமிழ்ச்சொற்களையும் கீழே தருகிறேன் .
அவரசம் -- விரைவு
ஆசை -- விருப்பம் ,அவா
இராணுவம் -- போர்ப்படை
ஈனம் -- இழிவு
உச்சி --முகடு
சங்கீதம் -- இசை
சஞ்சலம் --கலக்கம்
சந்தர்ப்பம் -- உற்ற நேரம் / வாய்ப்பு
சோதனை --ஆய்வு
தகனம் -- சுடுதல்
தந்தம் -பல்
நயனம் --கண்
நீதி -- அறம் /அறமுறை
பரம்பரை -- தலைமுறை
பலன் -- பயன்
வசந்தம் --- வேனில்
வீரம் -- மரம்
நன்றி !
இன்னும் வரும் ..