தேடி அலைந்து வாங்கிய பெயர்

ஏன்டப்பா காளி உன் பேரனுக்கு என்ன பேருடா வச்சிருக்காங்க?
@@@@
அக்கா, என்னம்மோ 'அச்சுயுத்தா'ன்னு சொன்னாங்க. இதோ என் மவன் மாரிசி (மாரிஜி)யே வர்றான். அவனையே கேட்டுக்க.
@@@@@@
ஏன்டா பேரப் பையா மாரி. 'மாரி' (மழை)ன்னா நீ கோவிச்சுக்குவ. ஏன்டா மாரிசி உம் பையன் பேரு என்னடா?
@#@@@
அரே அத்தைஜி, நான் பல ஜோதிடர்களத் தேடி அலைஞ்சு கடைசில ஜோதிடத்தில டாக்டர் பட்டம் வாங்கின மகாஶ்ரீ டாக்டர் இஷ்டலிங்க ஜோதிடர்கிட்ட பத்தாயிரம் குடுத்து எம் பையனுக்கு வாஙகினபேரு 'அச்யுதா'.
@@@@@@
'அச்சு யுத்தவா'? நல்ல பேருடா மாரிசி. அச்சு யுத்தா! என்ன பொட்டப் புள்ள பேரு மாதிரி இருக்குதே.
@@@@#####
அத்தைஜி நீங்க உலக மகாஞானி. ஜோதிடஶ்ரீயா?
உங்களுக்கு இந்திப் பேரு பிடிக்காது. எனக்கு தமிழ்ப் பேரு பிடிக்காது. 'மாரி'ன்னு எங்கப்பா எனக்கு வச்ச பேரையே 'மாரிஜி'ன்னு மாத்திட்டவன் நான்.

■■■■■■■■■■■■■■■■■◆■■■■■■■■■■■■■■■
பிறமொழிப் பெயர் மோகம். தமிழரின் தீராத தாகம்
@@@@@#@@@@@@@@@@@#@@@@@@@@@@@■
Achyuta = indestructible. One who is firm.

எழுதியவர் : மலர் (15-Dec-19, 10:49 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 140

மேலே