தோழிக்காக ஒரு கவிதை சில பகுதி

ஒரு பூங்காவில் அமர்ந்து
பேச துவங்கினோம் மறுநாளன்று
எப்படி அவளிடம் யோசனை கேட்கலாம்
என்ற யோசிப்பின் விளிம்பில் நிற்க ...

அவளே கேட்டாள்...
ஏதோ கேக்க நினைக்கிறாய்
எதற்கு தயங்கி நிற்கிறாய் என ..
என் மனதை நான் சொல்லாமல் படித்து ...

அதுதான் நீ அதேதான் நீ
என்று கமல்ஹாசன் மனக்குரலில்
இல்லை உன்னிடம் யோசனை கேக்கலாமா
வேண்டாமா என்று மனதில் தயக்கம் என்றேன் ...

கேள் என்றாள் புன்னகைத்து கொண்டே
என்னை எப்படி உருவாக்க
எப்படி மெருகேற்ற
எப்படி என்னை தயார் செய்ய
உனக்கு தெரிந்ததை சொல் என்றேன்

அடுத்த நொடி அருவி போல் கொட்டினாள்
ஆயிரம் யோசனையை ...
எந்த தலைப்பு கொடுப்பினும்
தமிழின் எதுகை மோனை எடுத்து
சொல்வளம் மாறாமல் ...
இரத்தின சுருக்கமாய் உன் கவி வேண்டுமென ...

ம் என்று மட்டும் என் பதில் ..
மீண்டும் சொல்ல தொடங்கினாள்
உடன்பாடில்லை என்றேன் ..அவள் யோசனையில் ..

நீ என்ன யோசித்து வைத்திருக்கிறாய்
என பதில் கணை தொடுத்தாள்
பார்வையால் தொலைத்தெடுத்தாள்
சொல் என்றாள் செல்லமாய் அதட்டி ...

என் கவி என்பது
எளியோருக்கு வலியோருக்கும்
புரியும் வண்ணம் இயல்பாய்
தமிழ் வாசிக்க தெரிந்தோருக்கும்
புரியும் வண்ணம் ரசிக்கும் படி
இருத்தல் வேண்டும் என்றேன் ...

அருமை என்றாள்
தெளிவாய் இருக்கிறாய்
குறியாய் இருக்கிறாய்
முடிவாய் இருக்கிறாய்
பிறகேன் யோசனை கொண்டு
தயங்கி கிடக்கிறாய் என்றாள் ..

நாம் சொல்பவை எல்லாம்
சரி வருமோ எனும் தயக்கம்
நாளும் நமக்குள் பிறக்கும்
அதோடு நின்றாள் எப்படி
வெற்றி பிறக்கும் என்றாள்

தெளிவு பெற்றேன்
இனி நெளிவு இல்லை என் செயலில்
சுளிவு கொண்டு வலைப்பேன் தமிழை
எல்லோருக்கும் சேரும்வகையில் என்றேன்

மகிழிச்சி அவளுக்கும்
பிரிகையில் சொன்னால்
வாழ்த்துக்கள் என்றும் உனக்கு என்று
வாழ்வோம் வா தோழியாய் என்றேன்
சிரிப்புடன் நகர்ந்தாள் ...



(தொடரும் தோழிக்காக ...)

எழுதியவர் : ருத்ரன் (16-Dec-19, 8:25 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 120

மேலே