கூடி வாழ்

தனி குடித்தனம்--
தடுமாற்றம் தினம் தினம்...
வாதங்களில் விதன்டாவாதம்--
விடையளிக்குது நீதிமன்றம்......விவாகரத்து?
வாழ்க்கை பயணம் தொடங்கும் முன்னரே....வாழாவெட்டி?
படித்தவர்களே......சம உரிமையை பேசிக்கொண்டே....வாழ்க்கையை தொலைத்ததெங்கே?
கூடி வாழ்....
கூட்டு குடும்பமாய் வாழ்....
தனிமை தேடித்தேடி தீவாய்ப்போனதென்ன?
இயந்தர வாழ்க்கை நடுவே சிறிது யதார்தத்தை தேடிப்பார்ப்போம்....
செல்போனில் திறமையான பிள்ளைக்கு உறவுகளை சொல்லித்தருவோம்.....
பார்ட்டிகளை குறைத்துக்கொண்டு பாட்டி தாத்தாவுடன் பழகச்செய்வோம்....
தனித்து வாழந்து கண்டதென்ன ?தனிமையைத்தவிர....
கூடி வாழ்ந்து பார்-----
உனை காக்கும் சொந்தம்....
உனை வாழ்த்தும் பந்தம்....

எழுதியவர் : கோகுலம் (16-Dec-19, 10:08 pm)
சேர்த்தது : gokulam
Tanglish : koodi vaal
பார்வை : 114

மேலே