தோழிக்காக ஒரு கவிதை ஒரு பகுதி

நான் தோழியும் பேசுகையில் ..
அவள் கேட்டால் என்னவாக போகிறாய் நீ என
அத்தனை எதிர்பார்ப்பு அவள் முகத்தில்
பதில் இல்லை என்னிடத்தில் ..

மீண்டும் தொடங்கினாள் ...
மௌனம் மட்டுமே என்னிடத்தில்
எனக்கு நானே கேட்டு கொண்டேன் மனதில்
என்னவாக போகிறேன் நான் ..

இதுவரை எழாத கேள்வி
எனக்கே தோணாத கேள்வி
இப்போதைக்கு சொல்வோம்
பிறகு பார்த்து கொள்ளலாம் என்ற யோசனையில் ..

அவள் முகம் பார்த்து
சொல்ல தொடங்கினேன்
வார்த்தை மெல்ல தொடங்கினேன்
மென்று விழுங்கி தடுமாறி நிற்க

சொல் சீக்கிரம் என்றாள்...
சொல்கிறேன் என்றேன்
ஒரு பாடல் ஆசிரியராக
வரும் எண்ணம் நிழல் போல்
மனதில் வந்து போகுமென்றேன்

நிஜமாய் அருமை என்றாள்
உன் திறமைக்கு நிச்சயம் முடியும் என்றாள்
ஆனால் இன்னும் கடினமாய்
உன் உழைப்பு தேவை என்றாள் ..

போட்டி நிறைந்த உலகமிது
நீ தனித்து நிற்க
உன்னை தனித்து காட்டு என்றாள்
சரி என்றேன் புன்னகையுடன் ...

நேரம் கடந்தது தெரியவில்லை
நான் வருகிறேன் என்று
சென்று விட்டாள்..அவள்
சொல்லி சென்ற வார்த்தைகள் மட்டும்
என்னுள் கேள்வி கணைகளாய்

எப்படி என்னை மெருகேற்ற
எப்படி என்னை தனித்து காட்ட
எப்படி என் திறனை வளர்க்க
இன்னும் எத்தனையோ கேள்விகள் மட்டும்
பதில்கள் இன்றி ...
நாளை அவளிடமே கேப்போம் என்ற யோசனையில் நானும் நகர ...




(தொடரும் தோழி கவிதை )

எழுதியவர் : ருத்ரன் (15-Dec-19, 9:44 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 77

மேலே