மார்கழித்திங்கள்

தேன் சிந்தும் நேரம்
சிறு பார்வையின் தூரம்
நிகழாதோ புது அற்புதம்
தொடராதோ அது தினம்தினம்

ஏறாத ஏற்றங்கள் நான் காண
தணியாத தாகங்கள் என் வரிவடிவாக
புல்லாங்குழல் நெய்ததோர் அதிகாலை
நீயும் பட்டாம்பூச்சியாய்
கைகொண்டதேன் என் கவியினிலே

துளிர்விடும் ஆசைகள் நெஞ்சோடு
எண்ணாத எண்ணங்கள் விரல்களோடு
இனி நீயின்றி யார் என்னோடு
கைகோர்ப்பார் இரவையும் பகலென
நீந்தி கடந்திட கடந்திட

அலையாடும் அல்லியும் நானாக
தவறாமல் பொழியும் இளங்கதிரும் நீயாக
தீண்டாத இடம் தேடி தீண்டிட
தோதான இடம் தேடி
அலைகிறதே இந்த பெண்நெஞ்சமே

அணிலாடும் முன்றில் கார்கால பொதியில்
மழைதுளியாய் என்னை மீட்டுச்செல்ல
புயலென நீ புறப்பட்டு வரவேண்டுமே
மார்கழின் மலரவன் மாய திண்தோளனாய்
மைகொண்ட மாதவ மாயகிருஷ்ணனாய்
நீ வரவேண்டும் வரவேண்டுமே!
வரம்கூட தரவேண்டுமே தரவேண்டுமே!!

எழுதியவர் : மேகலை (18-Dec-19, 8:19 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே