மனிதம்

பீரங்கிகளால் தகர்க்கப்பட்டபொழுது
புத்தர்
சிரித்துக்கொண்டுதான் இருந்தார்
இடித்து வீழ்த்தப்பட்டபொழுது
பாபர்
உறங்கிக்கொண்டுதான்
இருந்தார்
மதுரை எரிக்கபட்டபொழுது
மீனாட்சியும் அருள்பாலித்துக்கொண்டுதான்
இருந்தார்..
தகர்ந்ததும்
வீழ்ந்ததும்
எரிந்ததும்
மனிதம் மட்டுமே.

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (19-Dec-19, 10:17 am)
சேர்த்தது : Rafiq
பார்வை : 156

மேலே