நீயும் கூட என் எதிரி தான்..

மனதிலுள்ள பாரத்தை இறக்கிவைத்து
மகிழ்வுடனே காலத்தைக் கழித்திருந்தேன்

நண்பர் குழாமுடன் நகர வீதிகளில் சிலநாள்...
மைதான வெயிலில் மார்க்கமாய் சிலநாள்...
கணினியும் கையுமாய் கருத்துடன் சிலநாள்...
இணையமதில் இணைந்தே இங்கிதமாய் சிலநாள்...

நீ வரும்நாளதுவும் நினைவில் வந்திடவே,
காலங்களும் கடந்தன கரை புரண்டோடியே..

நீயேனும் எனக்கு ஆறுதலாய் ஆர்வலிப்பாய் என்றே,
அன்றொரு நாள் மதியநேரம் இணைய வழி காத்திருந்தேன்....
வந்திருந்த exam results நீயோ எனக்கு ஆப்படித்தாய்...
அந்த வழி நீயும் கூட என் எதிரி தான்..

எழுதியவர் : சுஜன் (13-Sep-11, 1:50 am)
சேர்த்தது : சுஜன்
பார்வை : 314

மேலே