ஆண்மீகவாதி
அண்ணே நம்ம கட்சி ஒரு வருசத்திலயே நல்ல வளர்ச்சி அடைஞ்சிருக்கு.
@@@@@@
ஆமாண்டா தம்பி. உன்னோட அண்ணி எனக்கு கொடுத்த தொல்லை, செஞ்ச கொடுமை தாங்கமுடியுமா அவளைவிட்டுப் பிரிஞ்சு வந்து ரொம்ப சந்தோசமா இருக்கிறேன்டா தம்பி. நான் ஒரு கட்சி ஆரம்பிச்சதுக்கே அவதான்டா தம்பி காரணம்.
@@@##
அதுசரி. நீங்க ஆன்மீக அரசியல்வாதின்னு நிருபர் கூட்டத்தில அறிவிச்சீங்களே.
@@@@@
ஆமாம்.
@@@@@
நீங்க கடவுள் நம்பிக்கை இல்லாதவர். கட்சியோட துவக்க விழாவில் 'ஆன்மீகவாதி நான்"னு நீங்க அறிவிச்சது
பொய்யா.
##########
தம்பி நான் பட்டதாரி. தமிழ்ப் பாடத்தில எல்லாத் தேர்விலயும் எழுபது சதவீதத்துக்குக் குறையாம மதிப்பெண் பெற்றவன். நீ உருண்டு புரண்டு பட்டம் வாங்கினவன். உன்னால ஒரு பத்திகூடத் தப்பில்லாம எழுத முடியாது.
@@###
அதை எதுக்கண்ணே இப்பச் சொல்லறீங்க?
@@@@@@
நான் சொன்னது 'ஆன்மீக அரசியல்' அல்ல..'ஆண்மீக அரசியல்'. பெண்களின் கொடுமைக்கு ஆளான ஆண்களுக்குக்காக ஆரம்பிச்ச கட்சி நம்ம கட்சி. இத நான் பல தடவை சொல்லியும் உன் மூளையில பதியல.
@@@@@
மன்னிச்சுக்குங்க அண்ணே. நான்
விபத்தில அடிபட்டதிலிருந்து அடிக்கடி ஞாபகமறதி ஆகுது.
@@@@@
வாழ்க்கையில கஷ்டப்படற பெண்கள ஆதரிக்கறவங்க பெண்ணியவாதி. அதே மாதிரி கொடுமைக்கு ஆளாகிற ஆண்களுக்கு ஆதரவாப் போராடறவன் ஆணியவாதி. அப்படிப்பட்ட ஆண்களுக்கான கட்சிதான் 'ஆண்மீக அரசியல்'. இப்பப் புரிஞ்சுதா?
##@###@#
கொஞ்சம் புரிஞ்சமாதிரி இருக்குதுண்ணே.
@@@@@
சரி. சரி. நீ போயிட்டு வா. நாளைக்கு பாக்கலாம்.
@@@@@@
சரிங்க அண்ணே.