ஏசு - அதிசயம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
ஏசு - அதிசயம்✝🙏🏽🎂
உலகத்தை ரட்சிக்க அன்னை மேரி மைந்தனாக அவதரித்த புனிதமானவரே!
அகிலம் முழுவதும் அன்பு மழை பொழிய
அவதாரம் எடுத்த கருணை கடலே!
உவமைகள் பல கூறி
உண்ணதங்கள் பல செய்த உலகம் போற்றும் பரம பிதாவே!
கயவர்களின் சூழ்ச்சியால் சிலுவையில் அறையப்பட்ட தியாகத்தின் முழு வடிவமே!
மீண்டும் இவ்வுலகில் உள்ள அனைத்து அவலங்கள் நீக்க,
பாவங்கள் போக்க
கருனையுடன் உயிர்தெழுந்த ஆவியானவரே!
உன் சீடர் மட்டுமல்ல நாங்கள் அனைவரும் நீ சென்ற பாதையை என்றும் பின் தொடர்கிறோம்.
முட்கள் நிறைந்த வாழ்க்கை பாதை தனை பூத்து குலுங்கும் நந்தவனம் ஆக்குவது உன் மேலான ஆசியால் தான்.
நஞ்சுள்ளம் கொண்டோரை நல்வழி படுத்துவதும் உன் அன்பு வார்த்தை வெளிபாட்டில் தான்.
ஆதரவற்ற உயிர்களை காக்கும் மனம் மனித மனம்தனில் ஏற்படுத்தியதும் உன் கருனையின் உச்சம் தான்.
பல பாவங்கள் செய்து அதன் பலனாக தீராத வியாதியுடன், கண்ணீருடன் உன் பாதம் தழுவும் மானுடர்களை உன் கரம் கொண்டு ஆர தழுவி அவர் பாவம் தனை கழுவி விமோசனம் தரும் எங்கள் பரலோக பரமபிதாவே!
அன்பின் ஆதாரமே!
அனைவருடைய வாழ்க்கையில்
ஒளி தீபம் ஏற்ற வந்த
ஞான ஒளியே!
உங்களை அனுதினமும்
தரிசித்து பரிசுத்தம் ஆகிறோம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
- பாலு.