காதல்

வசந்தம் வந்தது
சோலைக் குயில் கூவுது
அது சுகம் தரும் ராகமாய்
என்னுள்ளத்தில் வந்து சேருது
அதில் உறையும் என் காதலை
அவள் மீது நான் கொண்ட காதலை....
தொட்டு கிள்ளுது .....என் .
இதயத்திலிருந்து வெளியே போகுது
அலை அலையாய் காற்றில் அது ,
நான் பாடும் காதல் பாட்டாய்........
கேட்கத்தான் அவள் இல்லை
வருவாள் என்ற நினைப்பில் நான்
இதோ காத்திருக்கிறேன் .....
இந்த எந்தன் குயில் பாட்டிற்கு....
இதோ எதிரொலியாய் கேக்குதே
என் பாட்டு அந்த மலையைத் தொட்டு
அவள் குரல்..... குரல்.. இன்னும்
அத்துடன் கலந்து பதில்
எதிரொலியாய் வாராததேனோ ....
கலந்திடும் என்ற
நினைப்பில் நான் கனவிலே
ஓர் காதல் கோட்டை காண்கின்றேன்
அதில் காதலன் நான் ராஜா .......
காத்திருக்கிறேன் ......
என் ராணி வருகைக்கு !

கனவும் கலைந்தது.....அவளோ
இன்னும் வந்தபாடில்லை
ஆனால் அந்த என்னுளத்தை
வருடிய வசந்த கால சோலைக்
குயில் ஓசைக்கேட்டு பதில்
பாட்டும் பாடி அந்த பெண்
குயிலொடு சேர்ந்தது.....
அதோ என் காதில் வந்து
இசைக்குதே அந்த பறவையின்
காதல் 'டூயட்'......

அவள் வருகைக்கு இங்கு
தவிப்பில் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Dec-19, 3:27 pm)
Tanglish : kaadhal
பார்வை : 192

மேலே